சென்னை,
டாக்டர். மோகன்ஸ் சர்வதேச நீரிழிவு மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் நீரிழிவு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த மாநாடு நடைபெறுவதுவழக்கம். 5வது ஆண்டாக இந்தாண்டு மாநாட்டை மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தி தொடங்கி வைத்தார் நீரிழிவின் அடிப்படை அம்சங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் மற்றும் அது குறித்த தற்போதைய நிலையை மருத்துவ நிபுணர்கள் பகிர்ந்து கொள்ளவும் சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும் ஒரு வருடாந்திர நிகழ்வாக இம்மாநாடு நடத்தப்படுகிறது.

ஜூலை 22 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலகெங்கிலுமிருந்து மருத்துவர்களும் கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். நீரிழிவு தடுப்பு, கட்டுப்பாட்டில் வைக்கும் உணவு முறை மற்றும் உடல்சார்ந்த உழைப்பு, உடற் பயிற்சி போன்ற அன்றாட பழக்கங்களை மாற்றியமைக்கவேண்டிய அவசியம் குறித்து பல்வேறு அமர்வுகள் மாநாட்டில் நடைபெறவுள்ளன. சர்வதேச நிபுணர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்து நீரிழிவு சிகிச்சைத்துறையை சேர்ந்த 95 க்கும் அதிகமான நீரிழிவு சிகிச்சை மருத்துவர்களும் மற்றும் இத்துறையில் பணியாற்றும் அறிவியலாளர்களும் மாநாட்டில் உரையாற்ற உள்ளதாக டாக்டர் மோகன் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.