தாராபுரம்,
சென்னை அயனாபுரத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருத்திகா தலைமை வகித்தார். இதில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மனிதாபிமானமற்ற மனித மிருகங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கவேண்டும். தமிழக அரசு உடனடியாக வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் தாலுக்கா செயலாளர் என்.கனகராஜ், மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகள் பி.பொன்னுசாமி, ஆர்.வெங்கட்ராமன், சுப்பிரமணியன், கோவிந்தராஜ், முத்துசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.