தருமபுரி,
சென்னை அயனாவரத்தில் மாற்றுதிறனாளி சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தருமபுரி பிடிஓ அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி.தும்பாராவ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில பொருளாளர் கே. ஆர். சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் பி.சரவணன், மாவட்டச் செயலாளர் கே.ஜி.கரூரான், பொருளாளர் ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.என். மல்லையன், அனைத் திந்திய ஜனநாயக மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸா மேரிஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.