திருப்பூர்:
திருப்பூர் திருமலைகவுண்டன் பாளையத்தில் சத்துணவு சமைய லரை பணி செய்யவிடாமல் தடுத்த 87 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேயூரை அடுத்துள்ள திருமலைக்கவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியின் சமையல் பணியாளராக அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து திங்களன்று சமையல் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, அவ்வூரைச் சேர்ந்த சாதி ஆதிக்க சக்தியினர் தலித் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் தங்கள் குழுந்தைக்கு உணவு சமைத்து தருவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அவரை சமைக்க விடாமல் தகராறு செய்தனர்.

மேலும், பாப்பாளை பள்ளியை விட்டு மாறுதல் செய்யவேண்டும் எனக்
கூறி செவ்வாயன்று காலை பள்ளி யை திறக்கவிடாமல் தகராறு செய்த
னர். இதுகுறித்த தகவறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சமை யலர் பாப்பாளை ஒச்சாம்பாளையம் பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தர விட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட தலித் அமைப்புகள் மறியல்  உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட னர்.

குறிப்பாக, சத்துணவு சமையலரான பாப்பாளை பணி செய்ய விடாமல் தடுத்த சாதிவெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; பாப்பாளுக்கு வழங்கப்பட்ட பணி மாறுதல் உத்தரவை திரும்பப் பெற்று அவரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தினர்.இப்போராட்டத்தின் விளைவாக தற்போது, பாப்பாளை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டல் விடுத்த சாதி ஆதிக்க சக்தியினர் 87 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகாத வார்த்தையில் திட்டியது, சட்டவிரோதமாக கூடி கலவரம் செய்வது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேவூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.