கோவை,
கோவை கொடிசியா அரங்கில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட புத்தக கண்காட்சி வெள்ளியன்று துவங்கியது.

இந்த கண்காட்சியினை பள்ளிக்கல்வி துறை செயலாளர் உதயசந்திரன் துவக்கி வைத்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இந்த புத்தக கண்காட்சி குழந்தைகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. குழந்தைகள் மூலம் பெற்றோர்களும் வருவார்கள். புத்தக கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான முதிர்ச்சியான சமூகத்தை உருவாக்க முடியுமென்றார். மேற்கு மண்டல மக்கள் இந்த புத்தக கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்தெரிவித்தார். புத்தக கண்காட்சியில் பங்கேற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில், எழுத்தாளர்களின் புதிய நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவும், வாசகர்களை சந்திக்கவும் புத்தககண்காட்சிகள் உதவுகிறது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் புத்தக கண்காட்சிக்கு வரவேண்டிய கடமை உள்ளது. புத்தகவாசிப்பு என்ன்பது ஆளுமையை மாற்றக்கூடியது. ஆகவே அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த புத்தக கண்காட்சியில் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவியல் கதைகள்,படங்களுடன் கூடிய சமூகநெறி கதைகள், காமிக்ஸ் உள்ளிட்ட புத்தகங்கள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தகங்களுக்கு ஏற்ப 10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை சலுகை அடிப்படையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.