புதுதில்லி :

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றின் கழிவறையில் 2ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

பின்பு கொலையில் தொடர்புள்ளதாக அப்பள்ளியில் வேலை செய்யும் பேருந்து நடத்துனர் அசோக்குமார் கைது செய்யப்பட்டார். மேலும், இக்கொலை வழக்கில் அதே பள்ளியில்  11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதிற்கு பின்பு இதுவரை குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், இவ்வழக்கில் ஜாமீன் தரக்கோரி மனு ஒன்றை அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

ஆனால், இது கொலை வழக்கு மற்றும் இந்த வழக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம். எனவே, ஜாமீன் வழங்க இயலாது என்றுகூறி மனுவை நிராகரித்தது. மேலும், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: