விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் கிராமத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை உடனடியாக போக்கவேண்டும், கடந்த பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வரவேண்டும்.

பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம், ஆரம்பதுணைசுகாதார நிலையம் ஆகியகட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும், இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்கக் கூட்டம் கிளைத் தலைவர் ஆர்.ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.  நிர்வாகிகள் ஏ.மேரிசாந்தகுமாரி, கே.ராதாகிருஷ்ணன், ஜெ. கருப்பாயி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. அர்ச்சுணன், செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, துணைச் செயலாளர் ஏ.தண்டபாணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். ஒன்றியத் தலைவர் டி. அஞ்சாபுலி, செயலாளர் பி.கலியமூர்த்தி, பொருளாளர் எம்.பெரியசாமி, எம்.சேகர்,வி.பெருமாள், ஏ.பிரேமா, அண்ணாமலை, கிளை செயலாளர் கள் பாபு, திருமால் உட்பட பலர் பேசினர்.முன்னதாக வெண்மணி தியாகிகளின் 50 ஆண்டு நினைவு தின செங்கொடி ஏற்றி செங்கொடிக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.