ஈரோடு,
அந்தியூர் பேரூராட்சியின் குடிநீர் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் 2018 ஆகஸ்ட் முதல் வீட்டு குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகை ரூ.3 ஆயிரம் என்பது ரூ.6 ஆயிரம் ஆகவும், வணிகம்மற்றும் தொழிற்சாலை குடிநீர் இணைப்பு டெபாசிட் ரூ.5 ஆயிரம் என்பது ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வீட்டு இணைப்புக்கான குறைந்தபட்ச குடிநீர்கட்டணம் ரூ.102-லிருந்து என்பது ரூ.150 ஆகவும், தொழிற்சாலை வணிகத்திற்கு  ரூ.202-லிருந்து ரூ.250 ஆகவும். 10 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஒவ்வொரு ஆயிரம் லிட்டருக்கும் வீட்டுக்கு ரூ.15, வணிகம் தொழிற்சாலைக்கு ரூ.25 என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்என வலியுறுத்தி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்தியூர்தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவினை அளிக்கையில், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் கொ.ராமன், மகபூப்பாட்சா, அமமுகழக மீனவர்அணி செயலாளர் ராஜீ (எ) அ.பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ஏ.கே.பழனிச்சாமி, கே.முனுசாமி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் அந்தியூர் தாலுகா பொருளாளர் ஆர்.பல்தேங்சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: