திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில், அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கு கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திறனூட்டல் பயிற்சி நடைபெற்றது. ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்தார். கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முதன்மைச் செயலாளர் ஜவகர் பேசும்போது, “கருவூலப்பணிகளை மேம்படுத்த, 288.91 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகங்களாக மாற்றி சம்பளம் பெற தேவையான தகவல்கள் இணைய வழியில் வழங்க முடியும். இதன் மூலம், ஆவணங்களை சமர்பித்த, ஒரே நாளில் சம்பளம் பெற முடியும். மேலும், இந்த திட்டம் மூலம், ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு, எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட உள்ளது.

2017-18 நிதி ஆண்டில் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலம் மூலம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 824 கோடி ரூபாய் வரவினமாகவும், ஒரு கோடியே 70 லட்சத்து 256 கோடி ரூபாய்  செலவின மாகவும் நிதி கையாளப்பட்டுள்ளது. இதுகுறித்து, கருவூலத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நவம்பர் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைப்ப டுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 7.39 லட்சம் பென்ஷன் தாரர்கள் எளிதில் கருவூலம் மூலம் பென்ஷன் பெற முடியும்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: