கொல்கத்தா :

நேற்று நடந்த 122வது IFA shield தொடரின் இறுதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி மோகன் பகன் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஈஸ்ட் பெங்கால் தனது 29வது IFA shield தலைப்பை நிலைநாட்டியுள்ளது.

கொல்கத்தாவிலுள்ள பராசட் மைதானத்தில் நடந்த இவ்வாட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோல் அடித்து முன்னிலை வகித்த மோகன் பகன் அணியை இரண்டாவது பாதியில் கோல்கீப்பரின் தவறினால் எதிர் அணியான ஈஸ்ட் பெங்கால் சமன் செய்தது. பின்பு பெனால்டி கிக் முறையில் ஈஸ்ட் பெங்கால் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.