அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய கவுன்சில் கூட்டம், சிறப்பு மாநாடாக இராஜபாளையத்தில் ஜூலை 18, 19, 20 தேதிகளில் நடைபெற்றது. இதையொட்டி ஜூலை 19 மாலை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் விவசாயிகள் பேரணி – பொதுக்கூட்டம் நடைபெற்றது. இடைவிடாமல் மழை பெய்தபோதிலும் பெரும் திரளானோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க அகில இந்தியத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, துணைத் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், கே.வரதராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், பொருளாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் என்.கே.சுக்லா, மல்லா ரெட்டி, பி.கிருஷ்ணபிரசாத், விஜூ கிருஷ்ணன், தமிழகத் தலைவர்கள் டி.ரவீந்திரன், கே.முகமது அலி, பி.டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.