சண்டிகர்,
அரியானா விருந்தினர் மாளிகையில் இளம் பெண்ணை அடைத்து வைத்து 4 நாட்களில் 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சகுலா பகுதியில் உள்ள மோர்னி மலைப்பகுதியில்  அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகைளில் இளம் பெண் ஜூலை 15 ந்தேதி முதல் 18 ந்தேதிவரை அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அந்த பெண்ணிடம் 40 பேர்  பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பி வந்த இளம் பெண் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு அறிமுகமானவர் என்றும்  விருந்தினர் மாளிகையில் வேலை வாங்கி தருவதாக  வாக்குறுதி அளித்து அந்த பெண்ணை அழைத்து சென்று உள்ளனர் என்றும்  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: