விருதுநகர்:
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு மாநாடு விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வியாழன் கிழமை மாலை கொட்டும் மழையிலும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.

பேரணியானது, இராஜபாளையத்தில் உள்ள காந்தி சிலை அருகே தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். பின்பு, தென்காசி சாலை வழியாகச் சென்ற பேரணி, சங்கரன் கோவில் சாலையில் உள்ள ஜவஹர் மைதானத்தில் நிறைவடைந்தது.

பின்பு, அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு பொதுக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வி.முருகன் வரவேற்புரையாற்றினார். அகில இந்திய தலைவர் டாக்டர் அசோக்தவாலே, அகில இந்திய பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, அகில இந்திய துணைத் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், கே.வரதராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் வரவேற்புக்குழு துணைத் தலைவர் பி.மாரியப்பன் நன்றி கூறினார். இதில், அகில இந்திய நிதிச் செயலாளர் கிருஷ்ணபிரசாத், மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம், மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணி, மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: