தீக்கதிர்

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

திண்டுக்கல்,
பழனி அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி அருகே கடையில் பல்லி விழுந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.