===ராகுல்ஜி===                                                                                                                                                                               ‘Lynch’ என்கிற சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதி சொல்லும் பொருள்: விசாரணை இன்றி ஒருவரைக் கொல்வதாகும். விர்ஜினியாவைச் சார்ந்த வில்லியம் லிஞ்ச் (William Lynch) என்ற சர்வாதிகாரி, குற்றம் இழைத்ததாக சந்தேகப்படும் நபர்களை விசாரணை இல்லாமல் தூக்கிலிட்டதால் இந்த வினைச்சொல் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.’’
ஜூலை 14 அன்று கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒரு ஊரில் நான்கு பொறியாளர்களை மக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அவர்கள் தப்பிக்கும் பொருட்டு காரில் ஏறி விரைந்து ஓட்டும் பொழுது கார் கவிழ்ந்துள்ளது.

50 க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து மீண்டும் அடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் கவலைக்கிடம். அவர்கள் என்ன குற்றம் செய்தனர்? தாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாக்லேட்டை நான்கைந்து சிறுவர்களுக்கு கொடுத்தது தான். வாட்சாப் மூலம் புரளி கிளப்பப்பட்டு, இவர்களை குழந்தை கடத்தல் காரர்கள் என்று நினைத்து இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்துள்ளன.ஜூன் மற்றும் மே மாதங்களில் மட்டும் 30 அப்பாவிகள், இப்படிப்பட்ட வதந்தி – தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிகழ்விலும், ‘குழந்தை கடத்தல்’ என்கிற
புரளி வாட்சாப்பின் சேவையை பயன்படுத்தி பரப்பப்பட்டு, கிராமத்திற்கோ அல்லது சிறு நகரத்திற்கோ வரும் ‘அன்னியர்கள்’ மீது அதாவது வேறு ஊரைச் சார்ந்தவர்கள்,
வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் மீது, தாக்குதல் நடக்கிறது. ஏன், சென்னை புறநகர் பகுதியில் கூட ஒரு மூதாட்டி இவ்வாறு கொல்லப்பட்டார்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. ஆனால் காட்டுமிராண்டித்தனமான தற்போதைய தாக்குதல் அதிக அளவிலான எண்ணிக்கை
யிலும் மிகவும் கொடூரமாகவும் உள்ளது. அதுவும் அசாம்,
குஜராத், மத்திய பிரதேசம், திரிபுரா, குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் அதிகமாகி உள்ளது.

இத்தகைய நிகழ்வுகளை தனித்தனியான சம்பவங்களாக பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய்யான தகவல்களை (உண்மை யாக வைத்திருந்தாலும் உணவு என்பது அவரவர் உரிமை) பரப்பி இஸ்லாமிய மக்களையும் தலித் மக்களையும் கொன்று குவித்ததில் தொடங்கியது இந்த மாபாதகச் செயல். 2015ல் முகமது அக்லாக்கின் வீட்டிற்குள் புகுந்து,மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய் சொல்லி, பசுக் குண்டர்களால் கொல்லப்பட்ட சம்பவம் இந்த படுகொலை களின் துவக்கப்புள்ளி. பின்னர் நாடு முழுவதும் பசுக் குண்டர்கள் பலரை, குறிப்பாக தலித் மக்களையும், இஸ்லாமிய மக்களையும் கொன்றனர். அடித்து நிர்வா
ணமாக்கி, துன்புறுத்தினர்.

இப்படி தலித் மக்களையும் இஸ்லாமிய மக்களையும் காட்டுமிராண்டி போல் கொல்லும் செயல் தற்போது குழந்தை கடத்தல் என்கிற பெயருக்கு மாறியிருக்கிறது. 14.7.18 அன்று கர்நாடகா
வில் நடந்த தாக்குதலுக்கு உள்ளான நால்வரும் இஸ்லாமியர்கள்.பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக இணைந்து செய்யும் வன்முறைவெறி
யாட்டங்களுக்கு பாஜக மாநில அரசுகளும், சங் பரிவாரங்களும் ஆதரவு தருவதையும், வன்முறையாளர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை நீர்த்துப் போகச்செய்யும்படியான போக்குகளையும் பார்க்க முடிகிறது.

இவர்களின் இப்படிப்பட்ட செய்கைகளின் மூலமாக இந்தியாவின் சமூக மதிப்பு அயல்நாடுகளின் பார்வையில் மிகவும் குறைந்திருக்கிறது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு இஸ்லாமிய வணிகர்களைக் கொன்ற சங் பரிவார் கும்பலில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்கான சட்டப்பூர்வ செலவீனங்களை ஏற்றுக்கொள்வதாக கோடா
என்ற தொகுதியைச் சார்ந்த பாஜக எம்.பி., நிஷிகாந்த் தூபே அறிவித்துள்ளார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த செயல் குரூர நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்
வாக்குமூலமன்றி வேறென்ன?

திரிபுராவில் 11 வயது குழந்தையொன்று கொல்லப்பட்டது. அந்த குழந்தையின் வீட்டிற்குச் சென்ற பாஜக அரசின் மந்திரி ரட்டன் லால் நாத் செய்தியாளர்களைச் சந்தித்து, அந்தக் குழந்தையின் இரு கிட்னிகளும் திருடப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டினைத் தெரி
வித்துள்ளார். அதைத் தொடர்ந்து இது குழந்தை கடத்தல் காரர்களின் செயல் என்று வதந்தி கிளப்பப்பட்டு அதனால் நடத்தப்பட்ட வன்முறையில் மூவர் படுகொலை செய்யப்பட்டனர்.

பெரும்பாலான இப்படிப்பட்ட கொடூரக் கொலைகள் எழுத்தறிவற்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில், வாட்சாப் மூலமாக திட்டமிட்டு பரப்பப்பட்டு அரங்கேற்றப்படுகிறது. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் புலம் பெயர்ந்து வந்த ஏழை தொழிலாளர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்று எளிதாக இனம் காணமுடிகிற அப்பாவிகள் தான். இப்படிப்பட்ட மாபாதக கொலைகளின் பின்னணியில் சங் பரிவாரக்
கும்பல்கள் இருப்பதால் போலீசும் உள்ளூர் நிர்வாகங்களும் செயலற்றுப் போகின்றன. பெரும்பாலான மாநில  அரசுகள் இப்படி தவறான பிரச்சாரத்தை வாட்சாப் மூல மாக கட்டவிழ்த்துவிடும் கயவர்களை சரியான முறையில் தண்டிக்காததால், இத்தகைய நிகழ்வுகள் மேலும் மேலும் தைரியமாக நடத்திட காரணமாகியிருக்கிறது.

சமூக வலைதளங்கள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றன என்று கதறும் பிரதமர் மோடி,இவ்விஷயத்தில் வாய் மூடி மௌனித்து இருக்கிறார்.இத்தகைய மனசாட்சியே இல்லாமல், ‘குழந்தை கடத்தல்’ என்கிற பொய்யான வாட்சாப் தகவலின் மீதான கொடூரமான வன்முறையாட்டங்கள், சமூகத்தில் ஏற்படக் கூடிய கொடும் நோய்க்கான பிரதான அறிகுறிகள்.
அதுமட்டுல்ல; உண்மையிலேயே குழந்தைக் கடத்தல் சம்பவங்களை மூடி மறைக்கிறது; குற்றவாளிகளைத் தப்ப விடுகிற பயங்கரமான உத்தியும் ஆகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.