விழுப்புரம்,
மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை முழக்க பொதுக் கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.சேகர் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயலாளர் எம்.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன், ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ணராஜ் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சித்ரா, ஆர்.டி.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி பேசியதாவது :- மக்களின் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்தும் அளவிற்கு நாடும், ஆளும் அரசும் தள்ளி உள்ளது. இதனை இப்படியேவிட்டு விடாமல் மக்களை திரட்டி கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். இம் மாவட்ட மக்களுக்கு 100 நாள் வேலையும் இல்லை. மழையும் இல்லை. விவசாயமும் பொய்த்துவிட்டது. திராவிட கட்சிகளில் பெருந்த தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால், யாரும் மக்களை கண்டு கொள்ளவில்லை. மாநில கல்வி அமைச்சராக இருந்தவர் மாவட்டத்தில் கல்வி கடைசி இடத்தில் உள்ளது. டாஸ்மாக் முதலிடம் பிடித்திருக்கிறது. மூன்று நாள் நடந்த ரெய்டில் பல கோடி பணம், கிலோ கணக்கில் தங்கம் சிக்குகிறது. ஏழைகளின் பெயரில் தங்கம், செல்வராஜ். ஆனால், வீட்டில் ஒருகுண்டுமணி கூட நகையில்லை. இனி ஏழைகள் பசி, பட்டினி என பெயர் வைத்துக் கொள்வது தான் சரியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.