புதுதில்லி,
நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று 2 வது நாளாக மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், நீட் தேர்வு மையங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தேர்வு எழுதுவதற்காக வேறு மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதாகவும், இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜிலா சத்யானந்த் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.  தமிழக  அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்களே காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் இனி நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே எழுத ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் வெளிமாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இனி, தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்.

Leave a Reply

You must be logged in to post a comment.