கோவை,
நிலுவை தொகை அனைத்தையும் முழுமையாக வழங்க வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக நடத்துநர் இல்லாத பேருந்தை இயக்கக்கூடாது. ஓட்டுனர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். ஆர்சி, ஆர்டி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள பணத்தை நிலுவையில்லாமல் அனைத்தும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்திற்கு அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது. இப்போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி கோவை கவுண்டம்பாளையம் அரசு போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு வியாழனன்று அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்பிஎப் சங்க நிர்வாகி சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேளாங்கன்னிராஜ், பொருளாளர் கோபால், முன்னாள் தலைவர் பா.காளியப்பன், முன்னாள் பொதுச்செயலாளர் எம்.அருணகிரிநாதன், எல்பிஎப் மு.ரத்தினவேலு, ஏஐடியுசி செல்வராஜ், வி.சி.கட்சி தொழிற்சங்கத்தின் ரவி, பிஎம்கே சிதம்பரம், எச்எம்எஸ் ராஜா மற்றும் தேமுதிக, பணியாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.