ஈரோடு,
சத்தியமங்கலம் அருகே தாளவாடி செல்லும் திம்பம் சாலையில் இரு சிறுத்தைகள் சுற்றித்திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி செல்லும் திம்பம் மலைப்பாதையில் 5 வது கொண்டை ஊசி வளைவு அருகே புதனன்று மாலை நேரத்தில் இரு சிறுத்தைகள் சாலையில் சுற்றித்திரிந்தது. இதனால் அச்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனஓட்டிகள் சிறுத்தைகள் அருகே செல்லாமல் எச்சரித்து தடுத்து நிறுத்தினர். இதன்பின்னர் சிறுத்தைகளை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக அச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: