திண்டுக்கல்:
டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் பிரிமியர் லீக்கின் 7-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன் – கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தின.இந்த ஆட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள என்.பி.ஆர்.கல்லூரியில் புதனன்று இரவு 7:15 மணிக்குத் தொடங்கியது.

டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருது : சதுர்வேது (திண்டுக்கல்)
அதிக சிக்சர் விருது : சதுர்வேது (திண்டுக்கல்)
அதிக பவுண்டரி விருது : சாருக்கான் (கோவை)

 

நாளைய ஆட்டம்
தூத்துக்குடி – கோவை
இடம் : திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி
நேரம் : இரவு 7:15 மணிக்கு

Leave a Reply

You must be logged in to post a comment.