சென்னை,
சென்னையில் மாபெரும் கிராமத்து திருவிழா ஜூலை 26 முதல் 29 வரை நடைபெறவுள்ளது.

அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் `வில்லேஜ் டிக்கெட்’ என்ற பெயரில் இந்த விழா நடைபெறும். இதில் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இலவசமாகச் சந்தைப்படுத்தும் வகையில் கண்காட்சி அரங்குகளும் இடம் பெற உள்ளன.பிராண்ட் அவதார் நிறுவனம், கிராண்ட் கேட்டரிங் நிறுவனத்துடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பிராண்ட் அவதார் முதன்மை செயல் அதிகாரி ஹேமச் சந்திரன் கூறுகையில். “நகர்ப்புறங்களில் பிறந்து, வளர்ந்த இளைஞர்களுக்கு நமது மூதாதையர் வாழ்ந்த தரமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலும், விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் இந்தத் திருவிழாவினை நாங் கள் சக்தி மசாலா, சத்தியபாமா கல்வி நிறுவனங்கள், டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி போன்றோரது ஆதரவுடன் ஏற்பாடு செய்ய உள்ளோம் என்றார்.

கிராமங்களில் சமைத்துப் பரிமாறப்படும் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் 32 மாவட்டங்களுக்கும் உரிய சிறப்பு உணவு வகைகளான நண்டு சாறு, அவல் வெல்லப் பாயாசம், கொல்லிமலை முக்கனி, உருளைப் பொட்டலம், ஊத்துக்குளி வெண்ணெய் தோசை, ஆற்காடு சிக்கன் பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், மதுரை கொத்து பரோட்டா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவுகள் இங்கு பரிமாறப்படும். மறந்து போன நம் பண்டைய விளையாட்டுகளான பல்லாங்குழி, கில்லி, கபடி, பம்பரம், தாயம், கோலி, ராட்டினம் போன்றவையும் இதில் இடம் பெறும்.பாரம்பரிய ஆடல்-பாடல் கலைகளான தெருக்கூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப் பாட்டு, கும்மிப் பாட்டு, பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், புலியாட்டம், பாண்டியாட்டம், காவடியாட் டம், தாரை-தப்பட்டை போன்ற நிகழ்வுகளும் இங்கு நடைபெறும். விவசாயிகள் தங்களது பொருள்களை இலவசமாகச் சந்தைப் படுத்தும் நோக்கில் அவர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஸ்டால்கள் ஒதுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: