ஈரோடு,
காளிங்கராயன் வாய்க்கால் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு வியாழனன்று முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி பழைய பாசன பகுதிகளான காளிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு வியாழனன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வே.பொ.சிவசுப்பிரமணி ஆகியோர் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர். அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்டு முறைவைத்து பாசனத்திற்காக ஜூலை 19 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை 120 நாட்கள் தொடரில் 80 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.