===ஆர்.பத்ரி ===                                                                                                                                                                       ‘‘ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நானும் எனது மனைவியும் வாங்கும் ஓய்வூதியத்தில் இருந்து வருடம் தோறும் ரூ.15,000/- தருகிறோம் தோழர்” என ஊக்கமளித்த அச்சுதன் மாஸ்டர்… ‘‘கூலி வேலை கிடைச்சு ஒரு நாளக்கி போனா 300 ரூபா கிடைக்கும். ஆனா கட்சிக்காக காசு கொடுக்கும் போது கணக்கா பார்க்க முடியும், இந்தாங்க 1000 ரூபாய்…’’
என நெகிழ வைத்த பழங்குடி சமூகத்தை சார்ந்த சுசீலா.

கட்சி உறுப்பினர்களை வீடுகளில் சந்திக்க சென்ற போது, அழைத்துச் செல்வதற்காக வந்த ஆட்டோ தொழிலாளியான கட்சி உறுப்பினர் ஹக்கீம் ‘‘தோழர்… என் பங்கும்
இருக்க வேணாமா, இரு தவணைகளில் ஆயிரம் தரேன்’’என்று அளித்த உற்சாகம்.
வீட்டுக்குச் சென்ற எங்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் தனது மொத்த குடும்பத்தோடும் உணவு பரிமாறிவிட்டு ரூ.5000 அளித்த மின்வாரியத் தொழிலாளி சண்முகம்.

கட்சிக்கு மனமுவந்து நிதியளித்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் குடும்பத்தினர்.

‘‘பொதுத்துறை நிறுவனங்கள் எனும் கோவிலைப் பாதுகாக்கும் கம்யூனிஸ்டுகளின் பணிக்காக எங்கள் கட்சிக் கிளையில் இருக்கும் மூன்று பேருமே தலா ரூ.10,000 தருகிறோம்” என கட்சியின் வேண்டுகோளை கிளையின் முடிவாக மாற்றிய தோழர்கள். கட்சி முழு மையும் ஒரே குடும்பமாக மாறி விட்டதை போன்றதொரு உணர்வு எங்களைக் கவ்விக்கொண்டது.

நீலகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முழுநேர ஊழியர்கள் பாதுகாப்பு நிதியை கட்சி உறுப்பினர்களிடமிருந்து பெறுவோம்; குறைந்த பட்சம், அதிகபட்சம் என இலக்கு எதுவும் நிர்ணையித்துக் கொள்ள வேண்டாம்; வேண்டுகோளோடு கட்சி உறுப்பி
னர்களது வீடுகளுக்கு சொல்வோம் என்ற மாவட்டக்குழு வின் ஆலோசனையோடு கட்சி உறுப்பினர்களை சந்திக்கச் சென்றபோது அவர்களிடம் வெளிப்பட்ட உணர்வுகளே இவையெல்லாம்!

கட்சியின் முழுநேர ஊழியர்களில் இருந்து கட்சி உறுப்பினர்கள் வரை அனைவரையும் வீடுகளில் சந்திப்போம்; ஆண்டுக்கு ஒரு முறை ஊழியர்கள் பாதுகாப்பு நிதி பெறுவோம் என்ற கட்சியின் முடிவை தோழர்கள் உணர்வுப் பூர்வமாக அமலாக்கி வருகிறார்கள். மொத்த
முள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களில் இதுவரை 691 தோழர்களை சந்தித்ததில் ரூ.9,76,900/- அளிப்பதாக உத்தரவாதம் அளித்ததோடு முதல் தவணை
யாக ரூ. 3,17,000/- நிதியும் அளித்துள்ளார்கள். வெறும் நிதி வசூல் மட்டுமே அல்ல, கட்சி உறுப்பினர்களின் வீடுகளுக்கு செல்வதும், அவர்களது குடும்பத்தினரைச் சந்திப்பதும்
இவ்வியக்கத்தின் மிக முக்கிய நோக்கம். கட்சிக் குடும்பங்களோடு நெருக்கம் உருவாக வேண்டும் என்பதாகவே இம்முயற்சி ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டக்குழுவின் இம்முயற்சிக்கு கட்சி அணிகள் தரும் உணர்வுப் பூர்வமான ஒத்துழைப்பை பார்க்க முடிந்ததோடு, கட்சி உறுப்பினர்களது குடும்பத்தினரும் கட்சியின் பால் வைத்திருக்
கும் அக்கறையையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக நிதி அளிப்பு பேரவையும் நடைபெற்றது, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று நிதியைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிக்குகட்சி உறுப்பினர்கள் தங்கள் உணர்வுப் பூர்வமான பங்களிப்பை அளிப்பது நல்ல அம்சமாகும். ஊழியர்களை பாதுகாப்பதில் கட்சியின் தலையீடும், கட்சியின் வளர்ச்சிக்காக மிகவும் அர்ப்பணிப்போடு மேலும் உழைக்க வேண்டும்
என்பதான ஊழியர்களின் உணர்வும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். அது தான் இத்தகைய முயற்சிகளை மேலும் வளர்த்தெடுக்க உதவும். மேலும் இன்றைய தேவையை கருத்தில் கொண்டு புதிய இளம் தோழர்கள்கட்சியின் ஊழியர்களாக இணைக்கப்பட வேண்டும் என்று அவர் அப்போது கூறினார்.

நீலகிரியில் நிச்சயம் அந்த உணர்வை இவ்வியக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல!

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்

Leave a Reply

You must be logged in to post a comment.