திருவில்லிபுத்தூர்;
விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் நகரில் நடைபெறும் அகில இந்திய விவசாய சங்கத்தின் சிறப்பு மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள புதனன்று காலை கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி வருகை தந்தார். அவருடன் பாதுகாவலர் ஒருவரும், உதவியாளர் ஒருவரும் வந்தனர். வந்த இடத்தில் அருகில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சென்றார்,

அப்போது காவல்துறை தரப்பில் பாதுகாப்பு குறித்து கேட்டபோது, வேண்டாம், கோவிலுக்கு செல்கிறேன். கோவில் கட்டிட அழகையும். கலை அழகையும் ரசிக்க செல்கிறேன். பாதுகாப்பு வாகனம் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு தனியாக தனது பாதுகாவலர், விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஏ.விஜயமுருகன் ஆகியோருடன் சென்றார். கோவிலில் அவரை சிபிஎம் நகர செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் எஸ்.வி.சசி குமார் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கோவிலுக்குள் சென்று உள்பிரகாரம், வெளி பிரகாரத்தை சுற்றி பார்த்து விட்டு .பின் கோவில் வரலாறை கேட்டு அறிந்து விட்டு மீண்டும் இராசபாளையம் சென்றார்
கேரள அமைச்சர் தனியாக வந்ததை பார்த்து கடை வியாபாரிகளும்.பொது மக்களும் பக்தர்களும் வியந்து பேசினர். தமிழக அமைச்சர்கள் இப்படி எளிமையாக வருவார்களா என்று முணுமுணுத்தனர். அமைச்சருடன் மம்சாபுரம் பாசன விவசாய சங்க தலைவர் முத்தையாவும் சென்றார்.

Leave A Reply

%d bloggers like this: