டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் – கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை மலைப்பகுதிகளில் 25 பேருடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது பேருந்து சூர்யதார் அருகே எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி 250 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 18 பேரில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐஜி சஞ்சய் குஞ்சியால் கூறியுள்ளார். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து உத்தரகண்ட் மாநில காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: