பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கதக் அருகே நடைபெறும் ‘மகதாயி’ போராட்டம் மூன்றாவது ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், இனி சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், அதற்குத் தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் 500 பேர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.கர்நாடக மாநிலம் கதக், பாகல்கோட்டை, தார்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் நீண்டகாலமாகவே குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இப்பிரச்சனையைப் போக்குவதற்காக மகதாயி – மல்லபிரபா நதிகள் இணைப்பு மற்றும் கலசா – பண்டூரி குடிநீர் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஆனால், கோவா பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.இதையொட்டி, உண்ணாவிரதம், சாலை மறியல், முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை நடத்திய விவசாயிகள், 2015 ஜூலை 15-ஆம் தேதி முதல் கதக் மாவட்டம் நரகுந்துவில் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டம் செவ்வாயன்று (ஜூலை 17) நான்காவது ஆண்டை எட்டிய பின்பும், இதுவரை பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.இதையடுத்து, இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகள், பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். ‘மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால் மகதாயி கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது; இந்தத் திட்டத்தை நிறைவேற்றி குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்; இல்லையேல், தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.