புதுதில்லி;
இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவைச் சந்தித்து வருவதன் காரணமாக, சமையல் (தாவர) எண்ணெய்களுக்கான இறக்குமதி ஜூன் மாதத்தில் குறைந்துள்ளது.கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 13 லட்சத்து 44 ஆயிரத்து 868 டன் அளவிலான தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், 2018-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 10 லட்சத்து 42 ஆயிரத்து 3 டன் அளவிற்கே தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23 சதவிகிதம் குறைவாகும்.ஒட்டுமொத்தமாக, 2016-17 நவம்பர் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 98 லட்சத்து 67 ஆயிரத்து 572 டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 2017 முதல் ஜூன் 2018 வரையிலான காலத்தில் 96 லட்சத்து 46 ஆயிரத்து 538 டன் அளவிற்கே தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒட்டுமொத்த இறக்குமதியிலும் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 2.2 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள ‘சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு’ ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் தற்போதைய வரி விகிதம் ஆகியவையே தாவர எண்ணெய் இறக்குமதி சரிவுக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: