புதுதில்லி,:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதனன்று புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் புதனன்று தொடங்கியது. அவை தொடங்கியபின்னர், கேரளாவிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளமாறம் கரீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ஜோஸ் கே. மாணி (கேரள காங்கிரஸ்), பினாய் விஸ்வம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியவர்களும் மற்றும் நியமன உறுப்பினர்களான டாக்டர் சோனால் மான்சிங், ரகுநாத் மகாபத்ரா, ராம் சாகல், ராகேஷ் சின்ஹா ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டார்.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: