இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நாடு முழுவதும் உள்ள கிளை நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30.06.2018 அன்ற 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி/எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதை ஆன்-லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு நடைபெறும் முறை: இதற்கான தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் தாய்மொழித் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும். இதில் முதல்நிலைத் தேர்வு, தாய்மொழித் தேர்வுகள் தகுதிகாண் தேர்வு மட்டுமே.

முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://ibps.sifyitest.com/niaasntjul18/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: