தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள வனப்பழகுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி : வனவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தவிர அறிவியல் அல்லது பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மொத்த பணியிடங்கள் : 158. இதில் 10 இடங்கள் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம் : கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு

எழுத்துத் தேர்வு முறை: இரண்டு விருப்பப் பாடங்கள் மற்றும் ஒரு கட்டாயப் பாடம் என மூன்று தாள்களுக்கு தலா 300 மதிப்பெண்கள் வீதம் 900-ம், நேர்முகத் தேர்விற்கு 120 மதிப்பெண்களும் சேர்த்து மொத்தம் 1020 மதிப்பெண்களுக்கு நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதித் தேர்வும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.08.2018

விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.