புதுதில்லி;
ஆப்கானிஸ்தான் நாட்டில் வாழும் இந்துக்களும், சீக்கியர்களும் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் அல்ல; அவர்கள் ஆப்கன் மண்ணைச் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்காவிற்கான ஆப்கன் தூதர் ஹப்துல்லா மொகித் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.‘ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்றே பலர் பார்க்கிறார்கள்; உண்மை என்னவென்றால், அவர்கள் ஆப்கானிஸ்தான் மண்ணைச் சேர்ந்தவர்கள்’ என்று ஹப்துல்லா மொகித் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியிலுள்ள நங்கர்கார் மாகாணத்திற்கு உட்பட்ட ஜலாலாபாத் நகரத்தில், சீக்கியர்களும், இந்துக்களும் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து அங்கு அடிக்கடி தாக்குதல் நடைப்பெற்று வருகிறது. அண்மையில் நடந்த தாக்குதலிலும் 19 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது, ஜலாலாபாத்திலுள்ள சீக்கியர்கள் சிலர், தங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பான விவாதங்கள் நடைப்பெற்று வந்தன.இந்நிலையில்தான், சீக்கியர்களும், இந்துக்களும் ஆப்கானிஸ்தான் மண்ணின் மைந்தர்கள்; அவர்கள் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள் அல்ல என்று ஹப்துல்லா மொகித் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: