ஒகேனக்கல்;
ஒகேனக்கல் பகுதியில் அருவியை மூழ்கடித்து வெள்ளம் ஓடுவதால், அருவிப் பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் பகுதியில் காவிரியாற்றில் வினாடிக்கு தற்போது 1.10 லட்சம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் செல்லவே அனுமதி மறுக்கப்படுகிறது. அப்பகுதியில் வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.தனியார் விடுதிகளும், சுற்றுலாப் பயணிகளை தங்க அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்வீழ்ச்சிப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும், மீட்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.