சிதம்பரம்,
சிதம்பரம் நகரையொட்டி வாய்கால் ஓரத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 370 குடும்பத்தினர் வீடு கட்டிவாழ்ந்து வந்தனர். இவர்களின் வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் வாய்கால் ஆக்கிரமிப்பு எனக் கூறி அவர்களது வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர்.

இந்நிலையில், வீட்டை இழந்தவர்கள் பலர் வேறு இடத்திற்கு குடிபெயர முடியாமல் தெருவில் உடமைகளை வைத்துக்கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டை இழந்து, பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மாற்று இடம் வழங்க வேண்டும் எனக் கோரி சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த காவல்துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிதம்பரம் கோட்டாட்சியரை சந்திக்க அனுப்பி வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் வீடு இழந்தவர்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் மூலம் தெரிவிக்கிறேன் மேலும் இந்த பகுதியில் உள்ள அரசு நிலங்களை கணக்கெடுத்து இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழியாக கூறினார். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் முத்து, நகர்க்குழு உறுப்பினர் செந்தில்,முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: