கால்பந்து,உலகின் முதன்மையான விளையாட்டாக இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டைப் போன்று நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் கள நடுவர்கள் கட்டுப்பாட்டில்தான் அனைத்து வித போட்டிகளும் நடைபெறும்.

நட்பு தொடர்,உலகக்கோப்பை தொடர்,கண்டங்களுக்கு இடையேயான தொடர் எதுவாக இருந்தாலும் கள நடுவர் என்ன நினைக்கிறோ அது தான் இறுதி முடிவு என்ற அளவிற்குக் கால்பந்தாட்டத்தில் நடுவர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. இந்நிலையில், கள நடுவர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில்,ரஷ்ய உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வார் என அழைக்கப்படும் வீடியோ உதவி நடுவர் (VAR-VIDEO ASSISTANT REFREE) முறையைச் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா அறிமுகப்படுத்தியது.
புதிதாகப் புகுத்தப்படும் இந்த வார் முறையைக் கண்டு ரஷ்ய உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற பெரும்பாலான நாடுகள் மைதானத்தில் அச்சத்துடனே களமிறங்கினார்கள்.

ஆனால், ரஷ்ய அரசோ ஃபிபா அதிகாரிகளுடன் இணைந்து வார் சாதனத்தை போட்டி நடைபெறும் மைதானத்தின் இருநாட்டு வீரர்களின் இருக்கைகளுக்கு அருகே வைத்து ஆய்வு செய்யவும்,நடுவர் ஆய்வு செய்வதை வீரர்கள்,ரசிகர்கள் என அனைவரும் வெளிப்படையாகக் காணவும் சிறப்பு ஏற்பாட்டைச் செய்து வீரர்களின் பதற்றத்தை குறைத்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வார் முறையில் எந்தவித சிக்கலோ, குறைபாடோ,தவறோ இல்லாமல் மிகுந்த கவனத்துடன் செயல்படுத்திய ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.இருப்பினும் நடுவர் மனது வைத்தால் மட்டுமே வார் முறைக்கு அப்பில் செய்யமுடியும் என்பதால் நடுவரின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தத் தொழில் நுட்பம் போதாது.

Leave a Reply

You must be logged in to post a comment.