புதுதில்லி;
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டவர் எனவும், அவர் பிரதமராவதற்கு தகுதி இல்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் சிங், அண்மையில் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஜெயபிரகாஷ் சிங்கை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி, மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார். தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது கட்சிக் கொள்கைக்கு எதிரானது என்று மாயாவதி கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: