கோவை,
கோவை அருகே கலைமகள் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த வழக்கில் பயிற்சியாளரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் செவ்வாயன்று அனுமதி வழங்கியது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்துள்ள நரசீபுரத்தில் கலைமகள் தனியார் கலை, அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. இங்கு தேசிய பேரிடர்மேலாண்மைப் பயிற்சியின் போது போலி பயிற்சியாளர் தள்ளிவிட்டு மாணவி இறந்த விவகாரத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை 4 நாள் போலிஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: