புதுதில்லி;
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மித்ரா, பாஜக-விலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இரண்டுமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர், தில்லியைச் சேர்ந்த சந்தன் மித்ரா. ‘பயனீர்’ பத்திரிகையின் நிர்வாக இயக்குநரான இவர், அத்வானியின் ஆதரவாளர் ஆவார்.

அண்மையில் கைரானா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெற்ற தோல்விக்காக, அக்கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். இது கட்சிக்கும் அவருக்கும் இடையே மோதலை உருவாக்கிய நிலையில், தற்போது பாஜக-வை விட்டு விலக சந்தன் மித்ரா முடிவு செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் அளித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: