வேலூர்,
வேலூர், கொணவட்டம் பகுதியில் இருந்த பட்டாசுக் கிடங்கில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கவியரசன், தீபா, ஷீலா, சிவக்குமார், அவரது மனைவி புஷ்பலதா ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சிவக்குமார், புஷ்பலதா தம்பதியினருக்கு நிவேதா, நிரோஷா என இரு மகள்களும், சீனிவாசன் என்ற மகனும் உள்ளனர்.பெற்றோர்களை இழந்த இந்த குழந்தைகளை அரவணைக்க ஆதரவின்றி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், உயிரிழந்த தம்பதியின் இரு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன், வெடிவிபத்தில் பலியான மற்றவர்களின் குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுஅளித்தனர். அதில், “பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணத் தொகைவழங்கிட வேண்டும். மேலும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பினை அரசு செய்து தர வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: