திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக மொத்தம் 158 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் கிராமப் பகுதிகளில் 78, நகரப் பகுதிகளில் 80 வாக்குச்சாவடிகள் அடங்கும். இவற்றையும் சேர்த்து எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 482 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் கிராமப்பகுதிகளில் 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி வீதமும், நகரங்களில் 1400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதமும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உத்தேசப் பட்டியலை மாவட்ட தேர்தல் பிரிவு உருவாக்கியது. இந்த உத்தேசப் பட்டியலை கடந்த 2ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கருத்துக் கேட்புக்காக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தொகுதிவாரியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடத்தி ஆலோசனை பெறப்பட்டது. இறுதிக்கட்டமாக செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்ட ஆலோச
னைகள் உள்பட பரிசீலிக்கப்பட்டு இறுதி உத்தேசப் பட்டியல் ஏற்கப்பட்டது.

இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி) 280 வாக்குச்சாவடிகளுடன் புதிதாக 17 சேர்த்து மொத்தம் 297 வாக்குசாவடிகள். காங்கேயம் 270 உடன் 22 சேர்த்து மொத்தம் 292 வாக்குசாவடிகள். அவிநாசி (தனி) 283 உடன் 29 சேர்த்து மொத்தம் 312. திருப்பூர் வடக்கு 327 உடன் 35 சேர்த்து மொத்தம் 362. திருப்பூர் தெற்கு 224 உடன் 9 சேர்த்து மொத்தம் 233. பல்லடம் 386 உடன் 20 சேர்த்து மொத்தம் 406. உடுமலை 283 உடன் 10 சேர்த்து 293. மடத்துக்குளம் 271 வாக்குச்சாவடிகளுடன் புதிதாக 16 சேர்த்து மொத்தம் 287 வாக்குசாவடிகள் அமையும். மொத்தம் ஏற்கெனவே உள்ள 2324 வாக்குசாவடிகளுடன் புதிதாக 158 சேர்த்து 2482 வாக்குச் சாவடிகள் அமையும். இத்துடன் வேறு இடம், கட்டிடத்திற்கு 71 வாக்குசாவடிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. 49 வாக்குசாவடிகள் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டதால் பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அத்துடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாதனைக்குறள், தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உள்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.