திருப்பூர்,
திருப்பூர் குப்புசாமிபுரம் பகுதியில் காவல் துறையினர் நடத்திய அதிரடி தனையில் 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். குட்காவை பதுக்கிவைத்த 4 பேரை செவ்வாயன்று கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் குப்புசாமிபுரம் பகுதியில் இருந்து திருப்பூர் மாநகராட்சியில் பிற பகுதிகளுக்கு குட்கா பொருட்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுவதாக காவல் துறையினர் கிடைத்த தகவலின் அடிப்படையில் குப்புசாமி பகுதியில் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மொத்த விலைக் கடையில் (அஞ்சனா ஸ்டோர்ஸ்) பெட்டிகளை கொண்டு செல்லப்படுவது குறித்து சந்தேகமடைந்த காவல் துறை அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர் இதில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா பொருட்களை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து அந்தக் கடையை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரை பிடித்து விசாரித்ததில் டெல்லியில் இருந்து குட்கா பொருட்களை மொத்தமாக வரவழைத்து திருப்பூர் நகர் பகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்பதை பரசுராம் ஒப்புக்கொண்டதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.  மேலும், கஞ்சா விற்பனை செய்து வந்த முருகேசன் என்பவரையும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த லட்சுமணன், பாபு என நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: