தாம்பரம்,
சென்னை மேற்கு தாம்பரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஒரு வீட்டில் கலப்பட தேயிலைத் தூள்பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.  அங்கு கலப்படதேயிலைத் தூள் மூட்டைகளில் பாக்கெட் செய்து வைக்கப்பட்டு இருந்தது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள கலப்படதேயிலைத் தூளைபறிமுதல் செய்தனர். அதனைதயாரித்த குரோம்பேட்டையைச் சேர்ந்த ராம் என்பவரை கைது செய்தனர். கலப்பட டீ தூள், தயாரித்து விற்பனை செய்ததில் யார்- யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட கலப்பட டீ தூளில் மரப்பட்டைகள், முந்திரி தோள் போன்றவை கலந்துள்ளன. அதனை மூன்றில் ஒரு பங்கு உண்மையான தேயிலைத் தூளுடன் கலந்து அட்டை பெட்டையில் அடைத்து ஒரிஜினல் டீத்தூள் போல கடைகளுக்கு வினியோகம் செய்துள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “கலப்பட தேயிலைத் தூளை சாதாரண தண்ணீரில் போட்டாலே நிறம் மாறி விடும். உண்மையான தேயிலைத் தூளை தண்ணீரில் போட்டால் நிறம் மாறாது. மேலும் இது போன்ற கலப்படம் உணவில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை வாட்ஸ்அப் எண். 9444042322-க்கு பொது மக்கள் தெரியப்படுத்த வேண்டும். தகவல் தருவோரின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.