சென்னை;
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய கடலில் தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை வேகமாக வீசும். ஆகையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை சார்ந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

Leave A Reply

%d bloggers like this: