விளையாட்டு உலகைப் பொறுத்தவரை எந்த போட்டியாக இருந்தாலும் வெற்றி பெற்ற நாட்டுக்கும்,இரண்டாம் இடம் பிடிக்கும் நாட்டுக்கும் மட்டுமே வெகுமதி அளிக்கப்படும்.இது உங்களுக்குத் தெரிந்த விசயம்தான்.

ஆனால்,உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வீரர்களை வெறுங்கையோடு அனுப்பாமல்,ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு விதமான பரிசுத்தொகையுடன் வழியனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா.
ஒரு உலகக்கோப்பை தொடரில் பரிசுத்தொகைக்கு மட்டும் ஏறக்குறைய 2800 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும்.இந்தப் பரிசுத்தொகையை ஏற்கும் பொருளாதார செழிப்பு கொண்ட நாடுகளை ஆராய்ந்த பின்னரே அந்த நாட்டிற்கு உலகக்கோப்பையை நடத்தும் நாடுகளின் பட்டியலில் வைக்கப்படும். தற்போது ரஷ்யாவில் நடைபெற்ற 21-வது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற 32 அணிகளுக்கும்,சுற்றிற்கு ஏற்ப பரிசுத்தொகை வழங்கியுள்ளது ரஷ்ய அரசு.பரிசுத்தொகைக்கு மட்டும் ரஷ்ய அரசு ரூ. 2740 கோடியைச் செலவழித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுத்தொகை பட்டியல்:
ரூ.260 கோடி           –            (முதலிடம் – பிரான்ஸ்)
ரூ.192 கோடி          –             (இரண்டாமிடம் – குரோஷியா)
ரூ.164 கோடி          –             (மூன்றாமிடம் – பெல்ஜியம்)
ரூ.151 கோடி         –             (நான்காவது இடம் – இங்கிலாந்து)
ரூ.110 கோடி          –            (காலிறுதி – உருகுவே,பிரேசில்,ரஷ்யா,சுவீடன்)
ரூ. 82 கோடி          –           (நாக் அவுட் – போர்ச்சுகல்,அர்ஜெண்டினா,மெக்ஸிகோ,                                                   ஜப்பான்,ஸ்பெயின்,டென்மார்க்,சுவிட்சர்லாந்து,கொலம்பியா)
ரூ. 55 கோடி          –       (குரூப் சுற்று – சவூதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா,தென் கொரியா,ஜெர்மனி, துனிசியா, பனாமா, செனகல், போலந்து)

Leave a Reply

You must be logged in to post a comment.