வேலூர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சிப்பாய்புரட்சி தின கலை இரவு விழாராணிப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஜி.கோபால் ராஜ் தலைமைதாங்கினார். த.ரஜினி வரவேற்றார். தா.வெங்கடேசன், கோ.ரங்கநாயகி, ஆர்.மணிகண்டன், ஜெ.ஜெயந்தி, ஆர்.புவனேஷ்வரி, ஜி.தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை போராட்ட தியாகி கல்யாணராமன் வாரிசுகள் கே.கே.ஜெயபாரதி, கே.கே.சிவராமன்,கே.கே.ராஜாராமன் ஆகியோரை சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து புயல் கலைக்குழுவினரின் ‘நாட்டு நடப்பு’ என்ற வீதி நாடகம் நடைபெற்றது. மேலும் கிராமிய பாடல்கள், பரத நாட்டியம்நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தமுஎகச மாநில துணை செயலாளர் பேராசிரியர் செ. சுந்தரவள்ளி, “சிப்பாய் புரட்சி வரலாறு, சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம் மக்கள், கிறித்தவர்கள் பங்கேற்ற வரலாற்றை விவரித்து” பேசினார். விழாவில் தமுஎகச வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.சுரேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினார்கள். முடிவில் இந்திய குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.