புதுதில்லி:
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு, வழங்கப்பட்ட தொகையை, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திருப்பிக் கேட்டுள்ளது. இது வங்கி ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் தொடர்ந்து 14 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறையும் கூட அளிக்கப்படவில்லை. பின்னர் இதற்காக ஒரு தொகை வழங்கப்பட்டது.
2017-ஆம் ஆண்டில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு எஸ்பிஐ-வங்கியுடன் இணைக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் – ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளின் ஊழியர்களுக்கும் இதேபோல கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பணமதிப்பு நீக்க அறிவிப்பின் போது, பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மட்டுமே கூடுதல் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், புதிதாக இணைந்த வங்கிகளின் ஊழியர்களுக்கு, முந்தைய நிர்வாகங்களே பொறுப்பு என்பதால், பணத்தை திருப்பித்தர வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.