காஞ்சிபுரம்,
குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சில வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, குழந்தை நலக்குழு மற்றும் இளைஞர் நிதிக்குழுமம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்தும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள்  புகார் அளிக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் www.ncpcr.gov.in என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள்பாதுகாப்பு ஆணையகத்தின் வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் மின்னணு புகார் பெட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றம் நடைபெற்ற இடம், குற்றம் செய்த நபர், தொடர்பு எண், மின்னஞ்சல் போன்ற விபரங்களைப் பதிவு செய்யும் வகையில் அந்த பக்கம் அமைக்கப் பட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றம் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யலாம். மேலும் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றால் அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்படவேண்டும். புகார் அளிக்கத் தவறும் பெற்றோர் மற்றும் புகாரினை பதிவு செய்ய மறுக்கும் அலுவலர்கள் மீதும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 பிரிவு 21ன் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.