அருப்புக்கோட்டை:
சாலை ஒப்பந்தப் பணிகளை செய்துவரும் எஸ்பிகே குழுமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செய்யாத்துரை மற்றும் அவரது மகன் நாகராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள், எஸ்பிகே குழும அலுவலகங்களில், 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், மதுரை மண்டல துணை ஆணையர் அஜய் ராபின் தலைமையில் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ,கணக்கில் காட்டப்படாத 163 கோடி ரூபாய் பணம், 100 கிலோ தங்கம் ஆகியவற்றை வருமான வரித் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து செவ்வாயன்று இரண்டாவது நாளாக சென்னை மற்றும் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனம், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: