“ஒபிஎஸ்சின் உறுதிமொழிக்கு முரணாக எஸ்சி/எஸ்டி மாணவர் உதவி
தொகை வெட்டு” என்கிறது டிஒஐ ஏடு. நிர்வாக ஒதுக்கீட்டில் படிப்பத
ற்கான கல்வி உதவிதொகைக்கான நிபந்தனைகளை கடுமையாக்
கியது மோடி அரசு. உதாரணமாக 50% பாஸ் விகிதத்தை கட்டாயமாக்
கியது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் இழப்பை மாநில அரசு
ஏற்கும் என்றார் ஒபிஎஸ். அதற்கு முரணாக தற்போது ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் துறை ஆணை பிறப்பித்திருக்கிறது என்கிறது
அந்த ஏடு. ஏற்கெனவே இந்த திட்டத்தின்கீழ் தரவேண்டிய ரூ 1260
கோடியை மோடி அரசு இன்னும் தமிழகத்திற்கு தராமல் இருக்கிறது
என்றும் அது சுட்டுகிறது. எஸ்சி/எஸ்டி யினருக்கு துரோகம் செய்வதே
மத்திய,மாநில அரசுகளின் தொழிலாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.