===எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்===

கூகுள் குரோம்: இணையம் இல்லாத இடங்களில் படிக்கும் வசதி
பல இடங்களுக்கும் பயணிப்பவர்களுக்கு இணைய வசதிகள் தொடர்ச்சியாக கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இச்சூழலில் செய்திகள் தகவல்களைப் படிக்க உதவும் வசதியை குரோம் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் எப்படி செயல்படுகிறது என்றால், பயனாளர்கள் தங்களுக்கு தேவையான செய்தி மற்றும் தகவல்களை இன்டர்நெட், வைஃபை இருக்கும்போது டவுன்லோடு செய்துகொண்டு அதை பிறகு ஆஃப்லைனில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் பயனர் தங்களுக்கு விருப்பமான செய்திகளை முதலில் தேர்வுசெய்ய வேண்டும். பின்பு பயனர் இருக்கும் இடம் மற்றும் விருப்பங்கள், செய்திகளின் முக்கியத்துவத்தை அறிந்து கூகுளே தானாக டவுன்லோடு செய்து தரும். இந்த வசதி தற்போது இந்தியா நைஜீரியா, பிரேசில் போன்ற 100 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஃபயர்பாக்ஸ்: ஒரே நேரத்தில் இரண்டு தளங்கள் பார்க்கலாம்                                                                                                                  ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ள சைடுபார் வசதியைப் போல, சைடுவியூ (Side View) எனும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. சோதனைப் பதிப்பாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள, இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இணையதளங்களை அருகருகே பார்க்கலாம்.அதாவது யூடியூப் வீடியோ பார்த்தபடி டிவிட்டரில் கருத்துக்களைப் பகிரலாம் படிக்கலாம். உங்கள் ஃபயர்பாக்ஸ் பிரௌசரில் இந்த வசதியை இணைத்துப் பயன்படுத்திப் பார்க்க https://testpilot.firefox.com/experiments/side-view என்ற தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.

ஃபேஸ்புக்: தொந்தரவு செய்ய வேண்டாம்
முன்னணி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது பயனாளர்களுக்கு சில புதிய வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. அதில் ஒன்று நீங்கள் எவ்வளவு நேரம் ஃபேஸ்புக்கில் செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளும் வசதி. அதற்கான டேபைக் கிளிக் செய்து நாம் செலவழித்த நேரத்தை அறியலாம்.அதேபோல் ஒரு குறிப்பிட்ட நேரத்தை செட் செய்துவிட்டால் அதற்கு மேல் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் அலாரம் போல ஒரு நோட்டிபிகேசன் வந்து உங்கள் நேரம் முடிந்ததைத் தெரிவிக்கும். இந்தப் புதிய வசதிகள் பலராலும் பாராட்டப்பட்டு வரும் சூழலில் தற்போது புதிதாக ‘தொந்தரவு செய்ய வேண்டாம்’ (Do not Disturb) என்ற வசதி சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும்போது அனைத்துவிதமான நோட்டிபிகேசனையும் மியூட் செய்துவிட்டு தொந்தரவும் இல்லாமல் ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம்.

வாட்ஸ்அப்: அட்மின்களுக்கு அதிகாரம்
வாட்ஸ் அப் ஆப் புதிய அப்டேட்டில் குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் வாட்ஸ் அப் குரூப் அட்மினாக இருப்பவர், அந்த குரூப்பில் உள்ள யார், யார் தகவல் அனுப்ப வேண்டும் என்பதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.இதன் காரணமாக முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வாட்ஸ் அப் குரூப்பில், குரூப் உறுப்பினர்கள் தங்கள் இஷ்டத்துக்கு தேவையற்ற தகவலைப் பகிர்ந்து தொல்லை தருவது தவிர்க்கப்படும். இந்த வசதியின்படி குரூப் அட்மின்கள் நினைத்தால் தங்களைத் தவிர மற்ற உறுப்பினர்கள் கருத்துக்களைப் பகிர்வதை முற்றிலும் தடுக்கலாம், அத்துடன் குரூப்பின் ஸ்டேட்டஸ், அமைப்புகள் ஆகியவற்றில் மாற்றம் செய்வதையும் தடுக்க முடியும்.

யுடியூப்: ஒரே நேரத்தில் வீடியோவுடன் அரட்டை
யூடியூப் வீடியோக்களை பார்த்துக்கொண்டே நண்பர்களுடன் உரையாடும் வசதி மொபைல் பயனாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் டெஸ்க்டாப் கணினிகளுக்கும் இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது.யுடியூப் தளத்தில் வீடியோ சாளரத்திற்கு வலப்பக்கத்தில் உள்ள அரட்டை வசதியைக் கிளிக் செய்து இந்த வசதியைப் பெறலாம். வீடியோ தொடர்பாக நண்பர்களுடன் தனித்தனியாக அல்லது குரூப்பாக தேவைக்கேற்ப தேர்வு செய்து உரையாடலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.