கொல்லிமலை
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், மலை வாழ் மக்கள் சங்க தலைவருமான எஸ்.டி .துரைசாமி படத்திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.

கொல்லிமலை முன்னாள் ஒன்றிய சேர்மனும், மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவருமான தோழர் எஸ்.டி.துரைசாமி ஜூன் 16 ஆம் தேதியன்று மரணமடைந்தார். இவர் மலை வாழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சந்தை, அரசு மருத்துவமனை, பஞ்சாயத் யூனியன் கட்டிடம், பாதை வசதிகள் போன்ற பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டார்.கொல்லிமலையில் மூத்த தோழர் எஸ்.டி.துரைசாமி படத்தை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில செயலாளர் ஆர்.சரவணன், மாநில துணைத் தலைவர் எ.பொன்னுசாமி ஆகியோர் படத்தினை திறந்து வைத்தனர். இதில் மூத்த தோழர் வி.கே.வெள்ளைச்சாமி, சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.கே.ராஜூ, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை தலைவர் எ.டி. கண்ணன் சங்கத்தின் மாவட்டக்குழ உறுப்பினர்கள் கே.வி.ராஜூ, மாணிக்கம் , ச ண்முகம், தங்கராஜூ மற்றும் பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள், மலை வாழ் மக்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.